நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய கட்சி தொடங்குகிறார் கைரி?

கோலாலம்பூர்:

அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட கைரி ஜமாலுடின் புதிய கட்சியை தொடங்குவதற்கான ஆலோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டில் முன்னணி அரசியல் தலைவராக கைரி விளங்கி வருகிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் அவர் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியைத் தழுவினார். அதே வேளையில் அம்னோவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் அடுத்து அரசியலில் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் பரவலாக உள்ளது.

குறிப்பாக டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அழைப்பை ஏற்று அவர் பெர்சத்து கட்சியில் இணைவார் என கூறப்படுகிறது..

ஆனால், அவர் சொந்தக் கட்சியை ஆரம்பிக்கவுள்ளார். அதற்கான ஆலோசனையில் அவர் உள்ளதாக நம்பப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset