நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா சிம்மோரில் நால்வர் போற்றி விழா

சிம்மோர்: 

ஈப்போ இந்து சங்கம் ஏற்பாட்டில் சிம்மோர்  தேவிஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு அதன் ஆலய நிர்வாகத்தின்  பேராதரவுடன்  இவ்விழா சிறப்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  சத்தியசீலா தோட்டத்  தமிழ்ப்பள்ளி, கிளேபாங் தமிழ்ப்பள்ளி , ஸ்ரீ அங்காலம்மாள் ஆலயம் மற்றும் ஸ்ரீ மகா எல்லை காளியம்மன் ஆலயத்தை பிரதிநிதித்து சுமார் 85 மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் திருமுறை, தோரணம் கட்டுதல், பக்தி பாடல், மாறுவேடம், கோலம் போடுதல் ஆகிய போட்டியும் இடம் பெற்றது.

இந்த நிகழ்வை பேரா மாநில இந்து சங்கத் தலைவர் சுந்தரசேகரன் தொடக்கி வைத்தார். 

இதில் அவர்  ஆற்றிய உரையில்,   மாணவர்கள்  சமயத்தின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து சமய ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தவேண்டும் என்று இந்து சமய சார்படைய அமைப்புகளை  கேட்டுக்கொண்டார்.

மாணவர்கள் மற்றும் இளையோர்கள் சமயத்தின் மீது  ஈடுபாடு காட்ட பெற்றோர்களின் பங்களிப்பு  மிக அவசியம் என்று கேட்டுக்கொண்டார்.

ஈப்போ இந்து சங்கத்தின் ஆலோசகர் ந. சுந்தரராஜூ ஆதரவுடன்  நடைபெற்ற இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் ஈப்போ இந்து சங்கத் தலைவர் து. இளவரசி நன்றியை கூறிக்கொண்டார்.

இந்த நிகழ்வில் வெற்றிப்  பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .

இதுபோன்ற நிகழ்வுகள் ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தப்படும் என்று இளவரசி கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset