நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏழைமையைப் பற்றி நீங்கள் பேசாதீர்; அது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது: அன்வாரை சாடிய சனுசி

ஷாஆலம்:

ஏழைமையைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம், அது பற்றி உங்களுக்கு தெரியாது என்று அன்வாரை கெடா மந்திரி புசார் முஹம்மத் சனுசி சாடினார்.

நாட்டில் ஏழைமையை ஒழிக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறி வருகிறார்.

ஏழைமையை பற்றி தெரிந்தால் மட்டுமே அதை பற்றி பேசவும் அதனை ஒழிக்கவும் முடியும்.

அவர் ஒரு அம்னோ தலைவரின் மகன். அவரது தந்தை நாடாளுமன்ற உறுப்பினர். அவரது தாயார் அம்னோ மகளிர் பிரிவு உறுப்பினர்.

அவர் சிறந்த பள்ளி, பல்கலைக்கழகங்களில் படித்தார்.

இப்படி வசதியாக பிறந்து வளர்ந்த அவருக்கு ஏழைமையைப் பற்றி தெரியும்.

ஆகவே, ஏழைமையைஒ பற்றி அவர் பேச வேண்டாம் என்று சனுசி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset