நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

எனது எல்லா படங்களிலும் சமூக நீதி பேசப்படும்: இயக்குநர் மாரி செல்வராஜ்

கோலாலம்பூர்: 

எனது எல்லா படங்களிலும் சமூக நீதி பேசப்படும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார். மாமன்னன் திரைப்படத்திலும் சமூக நீதி பேசப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

மேலும், மாமன்னன் திரைப்படம் வெளியான பிறகு நிறைய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

நடிகர் வடிவேலு முற்றிலுமாக வேறுவிதமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்று அவர் சொன்னார். 

முன்னதாக, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் நேற்று சென்னையில் நடைபெற்றது. 

மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset