நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முன்னாள் காதலியைக் கொடூரமாக கொன்ற ஆடவன் போலீசாரால் கைது 

புதுடில்லி: 

காதல் உறவு முறிந்த காரணத்தால் ஆத்திரமடைந்த ஆடவன் ஒருவன் முன்னாள் காதலியை 16 முறை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான். 

இந்த கொலையைப் புரிந்த சம்பந்தப்பட்ட 20 வயது ஆடவன் இந்தியா உத்திர பிரதேச மாநிலத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். 

காதல் முறிந்த நிலையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமுற்ற ஆடவன் அப்பெண்ணை கத்தியால் குத்தினான். அத்துடன் அப்பெண்ணின் தலையைப் பிடித்து சுவற்றில் இடிக்கும் காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிராவில் பதிவானது. 

சம்பந்தப்பட்ட பெண்ணைக் கொலை செய்யப்போவதாக அந்த ஆடவன் மிரட்டியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset