நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரியா மருத்துவமனையில் தீ; 3 நோயாளிகள் மரணம் 

வியன்னா: 

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் மோட்லிங் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்  நேற்று தீவிபத்து ஏற்பட்டது.

மருத்துவமனையின்  3ஆவது மாடியில் உள்ள ஒரு அறையில் தீப்பிடித்தது. 
இந்த விபத்தில் 3 நோயாளிகள் பலியானார்கள்.  ஒருவர் காயம் அடைந்தார். 

சுமார் 90 நோயாளிகள் மருத்துவமனையில்  இருந்து வெளியேற்றப்பட்டனர். 

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 
பலியானவர்களில் ஒருவரான 75 வயது நோயாளி படுக்கையில் சிகரெட் புகைத்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset