நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கத்துறை, குடி நுழைவு வளாகத்திற்குள் நிலவும் லாரி நெரிசல்; அரசு கவனிக்க வேண்டும்: யுனேஸ்வரன்

கோலாலம்பூர்: 

சுங்கம், குடி நுழைவு,  பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சுல்தான் அபுபக்கர் வளாகத்தில் (KSAB) லாரிகளால் ஏற்படும் நெரிசலைத் தீர்க்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

KSAB வளாகத்திற்குள் நுழையும் லாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளில் மறுமேம்பாடு அவசியம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக ஒவ்வொரு நாளும் 2500 முதல் 3000 லாரிகள் இந்த வளாகத்திற்குள் இயங்குகின்றன. இதனால் போக்குவரத்தில் மந்தநிலை ஏற்படுகின்றது. அதனால் லாரிகளின் பயண நேரம் மேலும் மாதமாகின்றது. 

இதனால் சுங்கத்துறை ஏற்றுமதி பொருட்களை உறுதிப்படுத்த மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலும் உருவாகிறது என்பதை யுனேஸ்வரன் நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டினார்.

இந்த வளாகத்தில் நீண்ட காலமாகக் கைவிடப்பட்ட 'ஹோல்டிங் பே' (Holding Bay) இந்த சிக்கல்களுக்குக் காரணமாக அமைகின்றது. இதனால் இங்கு பணிபுரியும் குடி நுழைவு, சுங்கத் துறை ஊழியர்களுக்கும் சிரமமாக உள்ளது என்றார் அவர்.

இதன் காரணமாக லாரி ஓட்டுநர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை  உள்துறை அமைச்சும், பொதுப்பணித் துறையும் முன்னெடுக்க வேண்டும்.

இதனால் சிங்கப்பூருக்குள் மக்கள் நுழைவதை மிகவும் திறம்படவும் ஒழுங்காகவும் மாறுவதை நம்மால் காண முடியுமென யுனேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset