நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தடம் புரண்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் பலி: ரவாங்கில் சம்பவம்

ரவாங்:

தடம் புரண்ட லோரிக்கு அடியில் சிக்கிய ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இந்த சம்பவம் இன்று காலை 5.41 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ரவாங் அருகே நிகழ்ந்தது.

28 வயதான உள்ளூர் ஆடவர் ஓட்டிச் சென்ற டிரெய்லர் லோரி சாலையில் வழுக்கி தடம் புரண்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

லோரிக்கு அடியில் சிக்கியிருந்தவரை மீட்பதற்கு ஒரு சில நிமிடங்கள் பிடித்தது.

அதே வேளையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் இறந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு படையின் உதவி இயக்குநர் ஹஃபிசாம் முஹம்மத் நோர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset