நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

லாரி ஓட்டுநர்களின் மனதின் குரலை கேட்க லாரியில் ராகுல் பயணம்

புது டெல்லி:

லாரி ஓட்டுநர்களின் பிரச்சனைகளை அறிய காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தில்லியிலிருந்து பஞ்சாப் தலைநகர் சண்டீகர் வரை லாரியில் பயணம் செய்தார்.

நாடு முழுவதும் உள்ள மக்களை இணைக்கும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என்ற பெயரிலான பயணத்தை ராகுல் காந்தி அண்மையில் மேற்கொண்டார்.

இதன் பலனாக பாஜக ஆட்சி செய்த அந்த கார்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், லாரி ஓட்டுநர்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ள லாரி பயணத்தை ராகுல் மேற்கொண்டுள்ளார். திங்கள்கிழமை இரவு தனது வழக்கமான வெள்ளை நிற டிஷர்ட்டில் சரக்கு லாரியில் ஓட்டுநருக்கு பக்கத்திலிருக்கும் இருக்கையில் ராகுலும் அவருடைய பாதுகாவலர்களும் அமர்ந்தபடி பயணம் செய்யும் காணொலி வெளியாகியுள்ளது.

அந்தக் காணொலியில் தாபாவில் அமர்ந்து லாரி ஓட்டுநர்களுடன் அவர் கலந்துரையாடுவதும் இடம்பெற்றுள்ளது.

செல்லும் வழியில் அம்பாலாவில் அமைந்துள்ள குருத்வாராவில் ராகுல் காந்தி வழிபட்டார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி ட்விட்டரில், மக்கள் தலைவர் ராகுல் காந்தி, லாரி ஓட்டுநர்களின் பிரச்சனையை புரிந்துகொள்வதற்காக தில்லியிலிருந்து சண்டீகர் வரை அவர்களுடன் பயணம் செய்தார்.

ஊடக புள்ளிவிவரங்களின்படி இந்திய சாலைகளில் 90 லட்சம் லாரி ஓட்டுநர்கள் பயணிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றை அதாவது லாரி ஓட்டுநர்களின் மனதின் குரலை கேட்கவே இந்தப் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset