
செய்திகள் இந்தியா
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
புது டெல்லி:
F&O பங்குச்சந்தையில் பெரிய நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதித்து பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கி வருகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், F&O பங்குச்சந்தை பெரிய நிறுவனங்களின் களமாகிவிட்டது. அவர்களின் முறைகேடுகளால் சிறிய முதலீட்டாளர்களின் பணம் தொடர்ந்து சுரண்டப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிதி நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் F&O சந்தையில் ஆயிரக்கணக்கான கோடிகளை முறைகேடாக கையாண்டதாக செபி சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும் பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார். மோடி அரசு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கி, சாதாரண முதலீட்டாளர்களை அழிவின் விளிம்புக்குத் தள்ளுகிறது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 12:40 pm
கடலூரில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் பலி
July 7, 2025, 9:41 pm
மும்பையில் ஹிந்தி பேசியவர்கள் மீது தாக்கரே கட்சியினர் தாக்குதல்
July 7, 2025, 9:36 pm
அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிமன்றமே எதிர்ப்பு
July 7, 2025, 8:52 pm
ராயட்டர்ஸ் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am