நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாலஸ்தீனர்கள் கொலை

டெல் அவீவ்: 

மேற்குக் கரையிலுள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

மேற்குக் கரையின் பலாட்டா பகுதியில் பயங்கரவாதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் 3 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட இந்தத் தேடுதல் வேட்டையில் மேலும் 6 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைந்துள்ள தற்போதைய கூட்டணி அரசு, அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகத் தீவிரமான வலதுசாரி அரசு என்று அது கூறப்படுகிறது. புதிய அரசு அமைந்ததில் இருந்து பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் அரசு மிகக் கடுமையாக நடந்து வருகிறது.

இஸ்ரேல் படையினர் தாக்கி 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், பாலஸ்தீனர்கள் நடத்திய தாக்குதல்களில் சுமார் 50 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset