நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹிஜாப் தடையை எதிர்த்து சாதனை படைத்த கர்நாடக மாணவி தபஸூம்

பெங்களூரு:

கர்நாடகாவில் தீவிரமாக நடைபெற்ற ஹிஜாப் தடை போராட்டத்தில் பங்கேற்ற மாணவி தபஸூம் ஷேக் 2ஆம் ஆன்டு பியூசி தேர்வில் கலைப் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

கர்நாடகத்தில் ஹிஜாபுக்கு அரசு தடை விதித்தது. முஸ்லிம் மாணவிகள் கல்வி பயில்வதை தடுக்கலாம் என்ற நோக்கத்தில் அரசியல்வாதிகள் செய்வதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தத் அநீதியை கல்வியால் வென்று சாதனை படைத்துள்ளார் தபஸூம் ஷேக்.
பெங்களூரு, என்.எம்.கே.ஆர்.வி. கல்லூரியைச் சேர்ந்த மாணவி தபஸூம் ஷேக், கலைப் பிரிவுப் பாடத்தில் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஹிந்தி, சமூகவியல், உளவியல் ஆகிய 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தும் சாதனை படைத்துள்ளார். தபஸூம் ஷேக் கூறுகையில்,
நான் முதலாமாண்டு பியூசி படித்துக்கொண்டிருந்த போது, கர்நாடகத்தில் எழுந்த ஹிஜாப் பிரச்சனையால் இஸ்லாமிய மாணவிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால் சில மாணவிகள் கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். நானும் குழம்பியிருந்தேன்.

மதசார்பற்ற நாட்டில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை நினைத்து வியந்தேன். சில நாள்களுக்கு கல்லூரிக்கும் செல்லாமல் இருந்தேன்.

அப்போது, மின் பொறியாளரான எனது தந்தை அப்துல்காம் ஷேக், தாய் பர்வீன் மோடி ஆகியோர் எனக்கு வழிகாட்டினர்.

கல்வியைத் தொடரவேண்டும் என்று கூறினர். கடினமாக படித்தால், இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக போராட முடியும் என்று தெரிவித்தனர்.

நாம் வாழும் நாட்டின் சட்டத்தை மதிப்பது நமது கடமை என்று தந்தை கூறினார். நான் நன்றாக படித்ததால், எனது குடும்பத்தின் பிற பெண்களுக்கு உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கருதினேன். அதன்பொருட்டு கடினமாக படித்து, மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளேன்.
இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset