
செய்திகள் இந்தியா
நடிகர் அஜித், ஷோபனா, நல்லி குப்புசாமி, கிரிக்கெட் வீரர் அஸ்வின் உட்பட 19 பேருக்கு இந்திய அரசின் பத்ம விருதுகள்
புதுடெல்லி:
குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் உள்ளிட்ட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. கல்வி, இலக்கியம். அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள். குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான 25-ம் தேதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில், தெலங்கானாவை சேர்ந்த துவ்வுர் நாகேஷ்வர ரெட்டி (மருத்துவம்), சண்டிகர் நீதிபதி (ஓய்வு) ஜெகதிஷ் சிங் கேஹர், குஜராத்தின் குமுதினி ரஜினிகாந்த் லகியா, கர்நாடகாவின் லட்சுமிநாராயண சுப்ரமணியம், கேரளாவின் எம்.டி. வாசுதேவன் நாயர் (மறைவு), சுசுகி மோட்டார் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மறைந்த ஓசாமு சுசுகி, பிஹாரின் ஷார்தா சின்ஹா (மறைவு) ஆகிய 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுபோல, தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா சந்திரகுமார், ஆந்திராவை சேர்ந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, பிஹார் முன்னாள் துணை முதல்வர் மறைந்த சுஷில் குமார் மோடி உள்ளிட்ட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த குருவாயூர் துரை.கே.தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர் (தினமலர்), எம்.டி.ஸ்ரீநிவாஸ், புரிசை கண்ணப்பா சம்பந்தன், ஆர்.ஜி.சந்திரமோகன், கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி, சீனி விஸ்வநாதன், பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் ஆகிய 10 பேர் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பட்டியலில் 23 பெண்கள், 10 வெளிநாட்டினர் இடம்பெற்றுள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த தவில் கலைஞர் பி.தட்சிணாமூர்த்தி, அமெரிக்க மென்பொறியாளர் சேதுராமன் பஞ்சநாதன், ஹரியானாவை சேர்ந்த பாரா வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் (33), கோவாவில் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த லிபியா லோபோ சர்தேசாய் (100), டெல்லியை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நீரஜா பாட்டியா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தக் இசைக் கலைஞர் கோகுல் சந்திரதாஸ் (57), நாகாலாந்தை சேர்ந்த பழ விவசாயி எல்.ஹாங்திங் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm