
செய்திகள் இந்தியா
வக்பு மசோதா: ஆளும் கட்சிகளின் திருத்தங்கள் ஏற்பு, எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரிப்பு
புதுடெல்லி:
வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு
எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரித்து, ஆளும் கட்சிகளின் திருத்தங்கள் ஏற்று மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ஆளும் கட்சி உறுப்பினர்களின் 14 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வக்பு சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் திமுக உறுப்பினர்கள் ஆ.ராசா, எம்.எம். அப்துல்லா, மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு 35 -க்கும் மேற்பட்ட முறை கூட்டத்தை நடத்தி ஆலோசனை நடத்தியது.
இதில் பலமுறை எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை கூடிய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் ஏற்பட்டதாக இக்கூட்டத்துக்கு பின்னர் ஜேபிசி தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், வக்பு சட்டத்தில் மொத்தம் 44 திருத்தங்களை செய்ய புதிய மசோதா வகை செய்கிறது. இதுகுறித்து கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விரிவான ஆலோசனை நடைபெற்றது. இந்த 44 திருத்தங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இவை அனைத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் வாக்கெடுப்பில் இந்த கோரிக்கை தோல்வி அடைந்தது. இதுபோல பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 14 திருத்தங்களில் மட்டும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
எனவே இந்த 14 திருத்தங்கள் மட்டுமே பெரும்பான்மை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த வரைவு மசோதா 28-ம் தேதி வெளியிடப்பட்டு 29-ம் தேதி 14 திருத்தங்களை ஏற்பதை உறுதி செய்ய வாக்கெடுப்பு நடைபெறும். 31-ம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm