நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வியாபாரிகளிடம் கோழி முட்டைகளை விற்று ஏமாற்றிய கணவன், மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு 

அலோர் காஜா : 

கடந்தாண்டு டிசம்பர் மாதம், இல்லாத கோழி முட்டையை இருப்பதாகக் கூறி வியாபாரிகளிடம் விற்பனை செய்து ஏமாற்றியது மட்டுமல்லாமல் அவர்களுக்கு 52,990 ரிங்கிட் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தம்பதியினர் மீது அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.

மாஜிஸ்திரேட் நூருல் பாஹியா கமாலுதீன் முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் ஹபீஸ் இப்ராஹிம் மற்றும் 35 வயதுடையஅவரது மனைவி,  இந்தான் ஹபீசா ரோஸ்லான் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று ஒப்புக்கொண்டனர்.

ஜனவரி 2-ஆம் தேதி முஹம்மது சயாபிக் பஷீர் அஹமது (32) என்ற வியாபாரியிடம் 4,245 முட்டை அட்டைகளை விற்பனை செய்யவுள்ளதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியின் சி.ஐ.எம்.பி வங்கிக் கணக்கில் ரி.ம 52,990 யைத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தவும் கூறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட அவ்வாறு செய்யவில்லை. 

லோட் 942, சிம்பாங் அம்பட்டில் டிசம்பர் 13, 2022 முதல் ஜனவரி 3, 2023 வரை இக்குற்றம் நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 417 மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிருப்பிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஐந்தாண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும். 

மலேசிய ஆயுதப்படைகள் (ஏடிஎம்) பயன்படுத்திய ஆடைகளை அணிந்து இராணுவத்தில் கேப்டனாக உள்ளதாகக் கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஏமாற்றிய குற்றத்திற்காக முஹம்மது ஹபீஸ் மீது குற்றவியல் சட்டம் 170, 171 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் 13 டிசம்பர் 2022 அன்று மாலை 5 மணிக்கு டெக் பிங் சான் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தில் இரண்டு குற்றங்களையும் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

பிரிவு 170 மற்றும் 171-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் மற்றும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது RM400 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

- அஸ்வினி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset