நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 தேர்தலில் வெற்றிபெறும் விஜய்? இணையத்தில் வைரலாகும் கருத்து கணிப்பு!

சென்னை

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், நடிகரும் அரசியல்வாதியுமான தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) பெரிய வெற்றியை பெறும் என்பதை காட்டும் கருத்து கணிப்பு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்த கணிப்பின் படி 
TVK – 95 முதல் 105 தொகுதிகளில் வெற்றி பெறும் அதோடு 34.55% வாக்கை பெறுமென கூறப்படுகின்றது.

அடுத்த நிலையில் திமுக கூட்டணி – 75 முதல் 85 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது (30.20%). அதிமுக கூட்டணி – 55 முதல் 65 இடங்களில் வெற்றி பெறும் என்றும்  (27.85%)  சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி உட்பட பிற கட்சிகள் – 5 முதல் 10 தொகுதிகளை கைப்பற்றும் (4.40%) என அந்த கணித்து கணிப்பு சொல்கின்றது.

இணையத்தில் வைரலாகும் கருத்துக் கணிப்பு எனக் கூறப்படும் இதில், விஜய் தலைமையிலான கட்சி தான் முதன்மை வெற்றியாளராக உருவெடுக்கும் எனக் கூறப்படுகிறது. இதனை அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆயினும், இது தனியாராக தயாரிக்கப்பட்ட கணிப்பு என்பதால், அதிகாரப்பூர்வ வாக்குச் சாவடி தரவுகள் அல்லது ஆய்வு நிறுவனங்களால் உறுதி செய்யப்படவில்லை.

என்ன இருந்தாலும், விஜய் தலைமையிலான TVK தற்போது தமிழக அரசியல் மேடையில் ஒரு பெரும் தலைச்சிறந்த அணி ஆக உருவெடுத்து வருவதை இந்த வகையான கருத்துக் கணிப்புகள் குறிக்கின்றன.

தயாளன் சண்முகம்
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset