நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சி  சீனர்களின் வாக்குகளை இழக்க நேரிடும்: ரஃபிசி ரம்லி எச்சரிக்கை 

கோலாலம்பூர்: 

16ஆவது பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சி சீனர்களின் வாக்குகளை இழக்க நேரிடும். 

இதற்கு முன் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவளித்த சீன சமூகத்தினர் மீண்டும் அதே கூட்டணிக்கு வாக்கு செலுத்த விரும்ப கொள்ளமாட்டார்கள் என்று பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் ரஃபிசி ரம்லி கூறினார். 

சீன வாக்காளர்களில் 32 விழுக்காட்டினர் இனிமேலும் நம்பிக்கை கூட்டணி அல்லது பிகேஆர் கட்சிக்குத் தங்களின் வாக்குகளைச் செலுத்த மாட்டார்கள் என்று ரஃபிசி திட்டவட்டமாக தெரிவித்தார். 

வாக்காளர்களின் ஆதரவு எண்ணிக்கை குறைந்து வருவதால் நம்பிக்கை கூட்டணி இதனை கருத்தில் கொள்ள வேண்டும். 

தேசிய முன்னணி வாக்காளர்கள் தேசிய கூட்டணியை ஆதரிக்கின்றனர். நம்பிக்கை கூட்டணி வாக்காளர்கள்  தேசிய முன்னணிக்கு வாக்களிக்கிறார்கள்.

இதனால் நம்பிக்கை கூட்டணியின் ஆதரவு அலை பெரும் கேள்விக்குறியாக உள்ளது என்று அவர் சொன்னார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset