நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு மாநில ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் துணைப்பிரதமர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி 

ஜார்ஜ்டவுன்: 

பினாங்கு மாநில ஆளுநர் துன் ரம்லி ஙாவை நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 

பினாங்கு மாநிலத்திற்குச் சிறப்பு வருகை புரிந்திருந்த டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி புதிதாக நியமிக்கப்பட்ட பினாங்கு ஆளுநரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

இரு தலைவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசித்தனர் என்று பெர்னாமா செய்தி ஊடகம் செய்தியை வெளியிட்டது. 

கடந்த மே 1ஆம் தேதி பினாங்கு மாநிலத்தின் 9ஆவது ஆளுநராக துன் ரம்லி ஙா நியமிக்கப்பட்டார். மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இந்த நியமனத்திற்கு இணக்கம் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset