நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் துணைத்தலைவர் தேர்தல்:  நூருல் இசாவிற்கு வாக்களியுங்கள்! ரபிஸி ரம்லி

பெட்டாலிங் ஜெயா

பிகேஆர் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிடும் நூருல் இசா அன்வாருக்கே வாக்களிக்க வேண்டுமென பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி பிகேஆர் உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளார்.

நூருல் இசா தோல்வியடைந்தால், அது பிரதமர் அன்வார் இப்ராஹிமையே நிராகரிப்பதாக அமையும். எனவே, வெற்றிப் பாதையில் நூருல் இசா செல்லவது அவசியமென ரபிஸி கேட்டுக் கொண்டுள்ளார்.

குடும்ப அரசியல் குறித்த விமர்சனங்களை எதிர்நோக்க பிகேஆர் தயாராக இருக்க வேண்டுமெனவும், ஆதரவாளர்கள் வெளியிடும் அறிக்கைகள் பொதுமக்களில் எதிர்மறை உணர்வை ஏற்படுத்தக்கூடாது எனவும் ரபிஸி எச்சரித்தார்.

2022ஆம் ஆண்டு பிகேஆர் தேர்தலில் ரபிஸி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்ககப்பட்டார். அதன்பின்னர் அமைந்த ஒற்றுமை அரசு, கட்சியின் நிலைத் தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset