நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்தாண்டு வங்கிகளில் இருந்து பணம் காணாமல் போனதாக 20,041 புகார்கள் பதிவாகி உள்ளன: பிரதமர்

கோலாலம்பூர்:

கடந்தாண்டு வங்கிகளில் இருந்து பணம் காணாமல் போனதாக 20,041 புகார்கள் பதிவாகி உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் வங்கில் இருந்து பணம் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதில் இணையம் வாயிலாக பொருட்களை வாங்குவதன் மூலமே அதிகமான மோசடிகள் நிகழ்ந்து வருகிறது.

இந்த மோசடியில் மட்டும் 9,258 போலீஸ் புகார்கள் பெறப்பட்டு உள்ளது.

மேலும் மக்காவ் ஸ்கேமில் 3,370 புகார்கள், முதலீடுகளில் 3,266 புகார்கள், கடன் விவகாரங்களில் 3,174 புகார்கள், ஆப்பிரிக்க லேவ் ஸ்கேமில் 792 புகார்கள், குறுஞ்செய்தி தொடர்பான 139 புகார்கள், வர்த்தக மின்னஞ்சல் தொடர்பான 42 புகார்களும் பெறப்பட்டு உள்ளது.

மலேசியாவை தவிர்த்து அனைத்துல ரீதியிலும் இதுபோன்ற மோசடிகள் நிகழ்ந்து வருகிறது.

இதுபோன்ற மோசடிகளை தவிர்க்கப்படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று செத்தியூ நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிஷூ கிர்னாய்ன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset