
செய்திகள் மலேசியா
3 அமைச்சர்களின் சந்திப்பு இந்திய தொழில் துறைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க வேண்டும்: மைக்கி
கோலாலம்பூர்:
3 அமைச்சர்களின் சந்திப்பு பிரச்சினையில் இருக்கும் இந்திய தொழில்துறைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க வேண்டும் என்று மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
ஜவுளி, நகை பொற்கொல்லர், முடித் திருத்தும் தொழில் துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்கள் கொண்டு வரும் நடவடிக்கை கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பே முடக்கப்பட்டது.
அதே வேளையில் இருக்கின்ற தொழிலாளர்களுக்கான பெர்மிட்டையும் புதுபிக்க முடியாது என உள்துறை அமைச்சு அறிவுத்து உள்ளது.
உள்துறை அமைச்சின் இம்முடிவு அத்துறையை சார்ந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலை நீடித்தால் இத்தொழில் துறைகள் முடங்கி போகும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண மைக்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன், உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் ஆகியோரை நாளை சந்திக்கவுள்ளதாக மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் அறிவித்து உள்ளார்.
இந்த சந்திப்பில் வாயிலாக இம்மூன்று இந்திய பாரம்பரிய தொழில் துறைக்கும் தீர்வு கிடைக்க வேண்டும்.
இது மைக்கியை தவிர்த்து ஒட்டுமொத்த தொழில் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 12:17 pm
தெலுக் இந்தானில் பயங்கர சாலை விபத்து: எட்டு எஃப்.ஆர்.யூ அதிகாரிகள் பலி
May 13, 2025, 11:52 am
2026 தேர்தலில் வெற்றிபெறும் விஜய்? இணையத்தில் வைரலாகும் கருத்து கணிப்பு!
May 13, 2025, 10:55 am
பிகேஆர் துணைத்தலைவர் தேர்தல்: நூருல் இசாவிற்கு வாக்களியுங்கள்! ரபிஸி ரம்லி
May 13, 2025, 10:31 am
பினாங்கு மாநில ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் துணைப்பிரதமர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி
May 12, 2025, 1:20 pm