நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சவுதி அரேபியாவிற்கு பயணமானார் பிரதமர் அன்வார் 

புத்ராஜெயா: 

சவூதி அரேபியாவின் பிரதமரும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்-சௌதினின் அழைப்பைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று முதல் மூன்று நாட்கள் சவுதி அரேபியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் உம்ராவையும் நிறைவேற்றுகிறார். 

மலேசியாவின் 10-வது பிரதமராகப் பதவியேற்ற பின் சவுதி அரேபியாவிற்கு அவர் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மற்றும் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்-சௌத், சவூதியின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹ்ம்மது பின் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்-சௌத் ஆகியோரைப் பிரதமர் இந்தப் பயணத்தின் போது சந்திக்க உள்ளார்.

மேலும், பிரதமர் சவூதி அரேபியாவில் உள்ள வர்த்தக சமூகம் மற்றும் மலேசிய புலம்பெயர்ந்தோருடன் சந்திப்பு அமர்வையும் நடத்தினார்.

May be an image of 3 people and people standing

பல ஆண்டுகளாக சவுதி அரேபியாவுடனான வலுவான உறவை இந்த அதிகாரப்பூர்வப் பயணம் சித்தரிப்பதோடு இரு நாடுகளுக்கும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் வாய்ப்பளிக்கிறது.

சவூதி அரேபியா மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக தளமாகவும் மேற்கு ஆசிய கண்டத்தில் இறக்குமதியின் மிகப்பெரிய ஆதாரமாகவும் உள்னது. உதாரணமாக, 2022-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவுடனான மொத்த இருதரப்பு வர்த்தகம் RM45.52 பில்லியனை எட்டியுள்ளது. 

பிரதமருடன் அவரது மனைவி வான் அசிசா, வெளியுறவு அமைச்சர் ஜம்ரி அப்து காதிர், தொடர்பு இலக்கவியல் அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் சென்றது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி

தொடர்புடைய செய்திகள்

+ - reset