
செய்திகள் மலேசியா
BREAKING NEWS: சுக்மா விளையாட்டுப் போட்டியில் கபடி, சிலம்பத்திற்கு இடமில்லை: அதிர்ச்சியில் விளையாட்டுத் துறையினர்
கோலாலம்பூர்:
சுக்மா போட்டியில் கபடி, சிலம்பம் ஆகிய விளையாட்டுகளுக்கு இடமில்லை என்பது சம்பந்தப்பட்ட விளையாட்டுத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கபடி, சிலம்பம் விளங்கி வருகிறது.
மலேசியாவில் ஒவ்வொரு மாநிலங்களில் இவ்விளையாட்டுகளுக்கு என அணிகள் உள்ளன.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்போட்டிகளை சுக்மாவிற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று இரு விளையாட்டு சங்கங்களும் கடுமையாக போராடி வருகின்றன.
கடந்தாண்டு தலைநகரில் நடைபெற்ற சுக்மா போட்டியில் இவ்விரு விளையாட்டுகளும் கண்காட்சி போட்டியாக இடம் பெற்றது.
அப்போது இப்போட்டிகளுக்கு வந்த முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மத் பைசல் அஸுமு, தலைமை செயலாளர் டத்தோ ஜனா சந்திரன் ஆகியோர் அடுத்த சுக்மாவில் இவ்விரு போட்டிகளும் கண்டிப்பாக பதக்கப் போட்டியாக இடம் பெறும் என கூறியிருந்தனர்.
இந்நிலையில் இவ்வாண்டுக்கான சீ போட்டி சரவாக்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான விளையாட்டு பிரிவுக்கான பட்டியலில் கபடி, சிலம்பம் ஆகி போட்டிகள் இடம் பெறவில்லை.
இது அவ்விரு விளையாட்டுத் துறை சார்ந்தவர்களை தவிர்த்து ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திறகே ஏமாற்றத்தை அளித்து உள்ளது.
கபடிப் போட்டி ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம் பெற்று உள்ளது. அதே போன்று சிலம்பமும் அனைத்துலக ரீதியில் போட்டிகள் நடைபெறுகிறது.
ஆனால் மலேசியாவில் மட்டும் இவ்விரு விளையாட்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது சமுதாயத்திடையே பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது.
மடானி மலேசியா கொள்கையில் அனைவருக்கும் சமமான உரிமை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறி வருகிறார்.
ஆனால் விளையாட்டுத் துறையிலேயே பாகுபாடு காட்டுவது வருத்தமாக உள்ளது.
ஆகவே, இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்ட உரிய தீர்வை காண வேண்டும் என்று அவ்விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 2:08 pm
சபா மாநிலம் சபா மக்களுக்கே என்ற கொள்கை என்னவானது ? தேசிய கூட்டணி தலைவர் கேள்வி
May 13, 2025, 1:26 pm
யானை குட்டி உயிரிழப்பு : இடத்தை விட்டு நகராத தாய் யானை
May 13, 2025, 12:59 pm
நுருல் இசாவின் போட்டி அன்வாருக்கானது அல்ல: சைஃபுதீன் விளக்கம்
May 13, 2025, 12:17 pm
தெலுக் இந்தானில் பயங்கர சாலை விபத்து: எட்டு எஃப்.ஆர்.யூ அதிகாரிகள் பலி
May 13, 2025, 11:52 am
2026 தேர்தலில் வெற்றிபெறும் விஜய்? இணையத்தில் வைரலாகும் கருத்து கணிப்பு!
May 13, 2025, 10:55 am