
செய்திகள் உலகம்
யூதக் குடியேற்ற தடை சட்டத்தை ரத்து செய்தது இஸ்ரேல்
ஜெருசேலம்:
பாலஸிதீனத்தின் மேற்குக் கரை பகுதியில் யூதக் குடியிருப்புகளையும், காஸாவிலிருந்து இஸ்ரேல் படையினர் வெளியேற்றுவதற்கும் கடந்த 2005ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை இஸ்ரேல் நாடாளுமன்றம் ரத்து செய்தது.
இதனால், அந்தப் பகுதியில் மீண்டும் யூதர்களைக் குடியேற்றுவதற்கு சட்டபூர்வமாக அங்கீகாரத்தை இஸ்ரேல் வழங்கி உள்ளது.
இது இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனையில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தனி நாடுகளாக பரஸ்பரம் அங்கீகரித்துக் கொண்டு செயல்படுவதுதான் பாலஸ்தீன பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை உண்டாக்கும் என்று உலகின் பெரும்பாலான நாடுகள் கருதுகின்றன.
எனினும், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் குடியேற்றத் தடை சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டதால் அந்தத் தீர்வை எட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு ஆசிய போரில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது.
அதையடுத்து, அந்த ஆக்கிரமிப்பு பகுதிகளில் யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்தி தங்கள் நாட்டைச் சேர்ந்த 7 லட்சத்துக்கு மேற்பட்டவர்களை அந்தப் பகுதிகளில் இஸ்ரேல் குடியமர்த்தியது.
எனினும், இத்தகைய குடியிருப்புகளை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அவை முட்டுக்கட்டையாக இருக்கும் என்று உலக நாடுகள் கூறின.
இதையடுத்து, 2005இல் அப்போதைய பிரதமர் ஏரியல் ஷரோன் தலைமையிலான அரசு, ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதிகளில் யூதக் குடியிருப்புகளைக் கலைப்பதற்கும், காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் படையினரை வெளியேற்றுவதற்கும் யூத குடியேற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தார்.
இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் நெதன்யாகு நீதிமன்ற அதிகாரத்தை குறைக்கும் வகையில் கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இதை சமாளிக்கவே யூத குடியேற்ற தடை சட்டத்தை அவர் ரத்து செய்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am