நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 9 பேர் பலி

இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9 பேர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில், நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுக்கு இலக்கான நிலையில் அவர்கள் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் நாட்டின்  அவசரநிலை சேவைக்கான பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

இந்த நிலநடுக்கமானது இந்தியா, தஜிகிஸ்தான் நாடுகளிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படை அதிகாரிகள் விரைந்து மீட்கும்படி பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷாரிப் உத்தரவிட்டுள்ளார்.

ஆதாரம் : NBC Newyork

- மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset