
செய்திகள் உலகம்
காங்கோவில் பயங்கரவாத தாக்குதல்: 22 பேர் பலி
கின்ஷாசா:
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடந்து வரும் சூழலில் அங்குப் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர்.பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கோவின் கிழக்கு இடுரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதாரம்: aljazeera
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm