நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷியா செல்கிறார் சீன அதிபர் ஷி ஜின்பிங்

பெய்ஜிங்:

உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்த வரும் நிலையில் ரஷியாவுடனான உறவை மேம்படுத்துவதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் மார்ச் 20 ரஷியா செல்கிறார்.

அங்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார். உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சமாதான முயற்சியிலும் அவர் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சுற்றுப் பயணத்தின்போது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை ஷி ஜின்பிங் மேற்கொள்வாரா என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, "அனைத்து பிரச்னைகள் மற்றும் சர்ச்சைகளுக்கும் ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்' என்று அவர் பதிலளித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset