நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு 

டாக்கா: 

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வங்காளதேசத்தின் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வங்காளதேச தேர்தல் ஆணையம் அவாமி லீக் கட்சியின் பதிவை இடைநீக்கம் செய்துள்ளது. 

பயங்கரவாத நடவடிக்கைக்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி வங்காளதேச இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தும் முஹம்மத் யுனூஸ் இந்த தகவலை வெளியிட்டார். 

அவாமி லீக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் உள்துறை அமைச்சகம் தடை விதித்து உத்தரவு வெளியிட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அக்கட்சியின் பதிவை இடைநீக்கம் செய்துள்ளது. 

கடந்தாண்டு வங்காளதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் மக்கள் புரட்சியாக மாறியது. இதில் நடப்பு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பியோடினார்.

தற்போது வங்காளதேசத்தில் இடைக்கால அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இடைக்கால அரசாங்கத்திற்கு முஹம்மத் யூனுஸ் தலைமையேற்றுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset