
செய்திகள் உலகம்
8 வழக்குகளில் ஜாமீன் பெற்றார் இம்ரான் கான்
லாகூர்:
லாகூர் உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 8 பயங்கரவாத வழக்குகளில் முன்ஜாமீன் பெற்றார்.
இம்ரான் கான் கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார். வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசுப் பொருள்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜாராகாமல் இருந்து வந்ததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இம்ரானை அவரது இல்லத்தில் கைது செய்ய பஞ்சாப் மாகாண காவல்துறையினர் முயற்சி செய்தனர். எனினும், அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இம்ரானின் ஆதரவாளர்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி இம்ரான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், சனிக்கிழமை வரை அந்த கைது உத்தரவை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டது.
அங்கு அவர் மீது தொடரப்பட்டுள்ள 8 பயங்கரவாத வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதாக அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am
டெக்சஸ் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 108-ஆக உயர்ந்தது
July 9, 2025, 10:17 am
பிரிக்ஸ் நாடுகள் மிக விரைவில் 10 சதவீத வரியை எதிர்கொள்ளும்: டிரம்ப் அறிவிப்பு
July 8, 2025, 11:28 am
தென் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானார் ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ்
July 7, 2025, 9:51 pm
பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா
July 7, 2025, 4:46 pm
சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசு 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm