
செய்திகள் உலகம்
ட்ரோன் வீழ்த்தப்பட்ட ஆதார விடியோவை வெளியிட்டது அமெரிக்கா
வாஷிங்டன்:
உக்ரைன் அருகே கருங்கடல் பகுதியில் உளவு ட்ரோனை ரஷிய போர் விமானங்கள் இடைமறித்து வீழ்த்தப்பட்ட விடியோ ஆதாரத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
42 விநாடிகளுக்கு நீளும் அந்த விடியோவில், ரஷியாவின் போர் விமானமொன்று அமெரிக்காவின் உளவு ட்ரோன் அருகே வந்து எரிபொருளைக் கொட்டிச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.
அடுத்ததாக,ரஷிய விமானம் ட்ரோனின் இறக்கை சேதமடைந்ததாக பென்டகன் தெரிவித்தது.
கருங்கடலுக்கு மேலே சர்வதேச வான் எல்லையில் எங்களின் எம்க்யூ9 ரீப்பர் வகை ஆளில்லா விமானம் தனது வழக்கமான ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தது.
அப்போது அந்த விமானத்தை ரஷிய விமானப் படைக்குச் சொந்தமான இரு "எஸ்யு27' போர் விமானங்கள் இடைமறித்து, அதன் இறக்கையிலுள்ள சுழலும் விசிறிகள் மீது சேதப்படுத்தியது.
இதனால் அந்த ஆளில்லா விமானத்தால் அதற்கு மேல் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதையடுத்து, அந்த விமானத்தை கடலில் விழச் செய்தோம் என்று அமெரிக்கா தெரிவித்தது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "சர்வதேச வான் எல்லையில் அமெரிக்க ஆளில்லா விமானத்தை இடைமறித்து சேதப்படுத்தியதன் மூலம் சர்வதேச சட்டங்களை ரஷியா மிகத் துணிகரமாக மீறியிருக்கிறது' என்று சாடப்பட்டிருந்தது.
பனிப் போர் காலத்துக்குப் பிறகு அமெரிக்க - ரஷிய விமானப் படைகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளது இதுவே முதல்முறை ஆகும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 11:55 am
உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா அதிபர் விளேடிமீர் புதின் அழைப்பு
May 11, 2025, 11:53 am
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியிக்கு அரசு தடை விதிப்பு
May 10, 2025, 8:35 pm
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்த ஒப்புதல்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am