நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பஹல்காமுக்கு கண்டனம்- காஸாவுக்கு கவலை: பிரிக்ஸில் இந்தியா

புது டெல்லி: 

பிரேஸிலில் நடைபெற்று வரும் 17-வது  பிரிக்ஸ் மாநாட்டில் 26 பேர் பஹல்காம் தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான பேசியதையடுத்து பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இரட்டை நிலைப்பாடு கொள்வதை நிராகரிக்கிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை மேலும் வலுவாக்க பிரிக்ஸ் தீர்மானித்துள்ளதுடன், ஐ.நா. தடை விதித்துள்ள பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும். காஸாலில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர ஆயுதத் தாக்குதலில் தினசரி நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழப்பது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

எனினும், காஸா தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset