நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை ஒலி: பயத்தில் விமானத்தின் இறக்கைகளிலிருந்து குதித்த பயணிகள்

மெட்ரிட்: 

ஸ்பெயினில் ஒரு விமானம் புறப்படும் போது தீ எச்சரிக்கை ஒலி ஒலித்ததால் பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற விமானத்தின் இறக்கைகளிலிருந்து கீழே குதித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.

ஸ்பெயினில் உள்ள Palma de Mallorca விமான நிலையத்திலிருந்து மான்செஸ்டருக்கு புறப்படத் தயாராக இருந்தபோது Ryanair Boeing 737 விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புறப்படும் போது திடீரென தீ எச்சரிக்கை ஒலி ஒலித்தது.

உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு குழுவினர், அவசர கதவுகள் வழியாக பயணிகளை வெளியேற்றும் பணியைத் தொடங்கினர்.

இருப்பினும், சில பயணிகள், குழுவினரின் அறிவுறுத்தல்களைக் கேட்காமல், பயத்தில் விமானத்தின் இறக்கைகளில் ஏறி அதிலிருந்து குதித்தனர்.

இதன்போது சுமார் 18 பேருக்கு சிறு காயங்களுக்கு ஏற்பட்டுள்ளன.

இதனிடையே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ எச்சரிக்கை ஒலித்ததாகவும், எந்த ஆபத்தும் இல்லை என்றும் விமான நிறுவனம் விளக்கம் அளித்தது.

பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset