நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்

கொழும்பு: 

கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படை கைது செய்கிறது. நீண்ட கால பிரச்சனைக்கு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு  வழங்கப்பட்ட  கச்சத்தீவை மீட்க வேண்டும் தமிழகத்தில் கோரிக்கை எழுந்து வருகிறது.

இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் கூறுகையில், கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் அத்துமீறி நுழைகின்றனர்.

அவர்கள் மீன் வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, கடல் தாவரங்களையும் கடுமையாக சேதப்படுத்துகின்றனர்.

இந்தப் பிரச்சனைக்கு தூதரக ரீதியில் தீர்வு காண இலங்கை தயாராக உள்ளது. ஆனால் இலங்கையின் ஒரு பகுதியாக உள்ள கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது.

இந்தப் பிரச்சனையை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட இந்தியக் கட்சிகள், அரசியல் காரணங்களுக்காகவே எழுப்புகின்றன என்றார் அவர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset