நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரின் தமிழ் நாளிதழான தமிழ் முரசு 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் நாட்டின் ஊடகங்களின் முன்னோடியாகவும் அக்குடியரசு நாட்டின் தமிழர்களின் தனித்த அடையாளமாக விளங்குகிறது தமிழ் முரசு நாளிதழ். 

தமிழ் முரசு நாளிதழ் வெளியாகி நேற்றுடன் தனது 90ஆம் ஆண்டை நிறைவு செய்தது. 

தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர் இதனை தெரிவித்தார். 

90 ஆண்டுகளைக் கடந்தும் தமிழ் முரசு நாளிதழுக்காக தமிழர்கள் இங்கு ஒன்றாக நிற்கின்றோம். நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் தமிழ் முரசு உள்ளது என்று த. ராஜசேகர் குறிப்பிட்டார். 

இன்னும் பத்தாண்டுகளில் சிங்கப்பூரை இல்லமாய் கொண்டு, ஓர் உலக தமிழ்ச் செய்தி ஊடகத்தை உருவாக்கத் தமிழ் முரசு முயலும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 

முன்னதாக, சிங்கப்பூரில் தமிழ் முரசு நாளிதழின் 90ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூர் அமைச்சர்கள், தமிழ் வாசர்கள், அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset