நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரிக்ஸ் அமைப்பில் இணையும் நாடுகளுக்கு எதிராக கூடுதலாக 10% வரி விதிக்கப்படும்: டொனால்ட் டிரம்ப் 

வாஷிங்டன்:

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்து அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். 

இவர்களுக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது என்று டிரம்ப் சுட்டிக் காட்டினார். 

2009 ஆம் ஆண்டு நடந்த பிரிக்ஸ் அமைப்பின் முதல்  உச்சநிலை மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இணைந்தது. 

அதன் பின் தென்னாப்பிரிக்கா இந்த அமைப்பில் சேர்ந்தது

கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்த்தது.

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான மலேசியாவின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset