
செய்திகள் உலகம்
12 நாடுகளுக்குப் புதிய வரி விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்:
சுமார் 12 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
வரி விதிப்பு தொடர்பான அறிக்கை நாளை திங்கட்கிழமை 12 நாடுகளுக்கு அனுப்பப்படும்.
அறிக்கையைப் பெறும் ஒவ்வொரு நாடும் அதன் ஏற்றுமதிக்கு வெவ்வேறு வரிகளைப் பெறும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அறிக்கையைப் பெறும் நாடுகளின் பெயர்கள் திங்கட்கிழமை மட்டுமே வெளியிடப்படும் என்று டிரம்ப் கூறினார்.
இந்தப் புதிய வரிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரக்கூடும் என்றும், சில நாடுகளுக்கு இது 70 விழுக்காடு வரை இருக்கலாம் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
இந்த 12 நாடுகளில் இந்தியாவும் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm
வரிக் குறைப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
July 6, 2025, 11:05 am
உக்ரைன் மீது 550 டிரோன்களை வீசி ரஷியா பயங்கர தாக்குதல்
July 6, 2025, 10:58 am
திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை ஒலி: பயத்தில் விமானத்தின் இறக்கைகளிலிருந்து குதித்த பயணிகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am