
செய்திகள் உலகம்
வரிக் குறைப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
நியூயார்க்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த செலவின மற்றும் வரிக்குறைப்பு மசோதா பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது.
செனட் சபையிலும் இந்த மசோதா கடும் இழுபறிக்கு பிறகு அண்மையில் நிறைவேறியது.
வரி குறைப்பு மற்றும் நாட்டின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்தும் மசோதாவை கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்தார். அதில், தனிநபர் வருமான வரிகள், தொழில் வரிகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் அதற்கு 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழிந்திருந்ததை, ஒரு சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மசோதாவை அழகிய பெரிய மசோதா என்று டிரம்ப் புகழ்ந்திருந்தார். எனினும், இதற்கு எலான் மஸ்க் மட்டுமின்றி டிரம்பின் குடியரசுக் கட்சியினரே கடுமையாக எதிர்த்தனர்.
பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதில், மசோதாவிற்கு ஆதரவாக 218 பேர் வாக்களித்தனர். 214 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதன்மூலம் டிரம்ப் கொண்டு வந்த மசோதா பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது.
இது டிரம்பிற்கு கிடைத்து மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
பெரும் பிரம்மாண்ட விழாவில் டிரம்ப் இந்த மசோதாவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 11:19 am
12 நாடுகளுக்குப் புதிய வரி விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
July 6, 2025, 11:05 am
உக்ரைன் மீது 550 டிரோன்களை வீசி ரஷியா பயங்கர தாக்குதல்
July 6, 2025, 10:58 am
திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை ஒலி: பயத்தில் விமானத்தின் இறக்கைகளிலிருந்து குதித்த பயணிகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am