நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இங்கிலாந்தைத் தொடர்ந்து நியூசிலாந்தும் டிக்டாக்கிற்குத் தடை

சிட்னி: 

சைபர் பாதுகாப்புக் காரணங்களுக்காக நியூசிலாந்து தனது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மின்னணு சாதனங்களில் சீனாவுக்குச் சொந்தமான சமூக ஊடக செயலியான டிக்டொக்கை தடை செய்யவுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மார்ச் மாத இறுதிக்குள் நியூசிலாந்து நாடாளுமன்ற நெட்வொர்க்கிற்கான அணுகலுடன் கூடிய அனைத்து சாதனங்களிலும் TikTok தடை செய்யப்படும் என பாராளுமன்ற சேவைகளின் தலைமை நிர்வாகி ரஃபேல் கோன்சலஸ்-மான்டெரோ தெரிவித்துள்ளார். இணைய பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனை மற்றும் அரசாங்கம் மற்றும் பிற நாடுகளுடனான விவாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதையும் அவர் விளக்கினார். 

இங்கிலாந்து அரசு தொலைப்பேசிகளிலில் இந்தச் செயலியைத் தடை செய்ததையடுத்து நியுசிலாந்து அரசும் இதனை மேற்கொள்ளவிருக்கின்றது. 

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset