செய்திகள் மலேசியா
கம்போங் உடாரா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உடைப்படுவதில் இருந்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டது
கோலாலம்பூர்:
கம்போங் உடாரா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உடைபடுவதில் இருந்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டது.
சுங்கைபீசிக்கு அருகே கம்போங் உடாராவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
பல ஆண்டுகளாக இந்த ஆலயம் இங்கு அமைந்துள்ளது. அதே வேளையில் இவ்வாலயம் மலேசிய இந்து சங்கத்திலும் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேம்பாட்டு பணிகளால் இந்த ஆலயத்தை அகற்றக் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
அதே இடத்தில் ஆலயத்தை தற்காத்து கொள்ள ஆலய நிர்வாகத்தினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆலயத்தை உடைக்க மேம்பாட்டு நிறுவனத்தினர் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் அன்ட்ரூ டேவிட், மியாபோர்ஸ் இயக்கத்தின் தலைவர் தயாளன், ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்கள் ஆகியோர் ஆலயத்தின் முன் திரண்டனர்.
மேம்பாட்டு நிறுவனம், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் இந்த ஆலயம் உடைபடுவதில் இருந்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டு உள்ளது.
அதே வேளையில் இந்த ஆலயம் இங்கையே நிலை நிறுத்துவதா அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்வதா குறித்து ஆலய நிர்வாகத்திடம் விவாதிக்கப்படும்.
மேலும் இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் உதவியும் நாடப்படும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 27, 2026, 10:54 pm
யூஐடிஎம் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட பல்கலைக்கழக ஹோல்டிங் நிறுவனங்களை உயர் கல்வியமைச்சு ஆய்வு செய்கிறது: ஜம்ரி
September 27, 2026, 8:36 pm
பேங்காக்கில் உள்ள மலேசியர்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்துகிறது
September 27, 2026, 3:12 pm
நஜிப்பின் வீட்டுக் காவல்; அபராதம் செலுத்த உதவும் நிதித் திரட்டல் 9.25 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது: ஜாஹித்
September 27, 2026, 3:10 pm
15ஆவது நாடாளுமன்றம் கலைக்கும் வரை தான் ஒருமைப்பாட்டு அரசுக்கு ஆதரவு: ஜாஹித்
September 27, 2026, 1:03 pm
மடானி அரசாங்கத்தில் இருந்து தேசிய முன்னணி உடனடியாக வெளியேற வேண்டும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 27, 2026, 11:26 am
நஜிப்பின் நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு: ஊழலை ஒழிக்கும் கொள்கையை டத்தோஸ்ரீ அன்வார் உறுதியாக ஆதரிக்கிறார்
September 27, 2026, 10:32 am
