நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாலையில் அதிரடிச் சோதனை: 72 அந்நியத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர்

இமிக்ரேஷன் துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது சிலாங்கூர் மொத்த விற்பனைச் சந்தையில் 72 அந்நியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமை காலை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இமிக்ரேஷன் அதிகாரிகள் வருவதை அறிந்த முறையான ஆவணங்கள் இல்லாத அந்நியத் தொழிலாளர்களில் பலர் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு தப்பிச்செல்ல முயன்றனர். சிலர் அங்கிருந்த மீன்பெட்டிகள், கழிவுநீர் குழாய்கள் ஆகியவற்றிலும்கூட ஒளிந்து கொண்டனர்.

சனிக்கிழமை அதிகாலை ஒரு மணி முதல் நான்கு மணி வரை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஐ.நா. அகதிகள் அட்டை வைத்திருந்த 39 பேரும் 19 வங்கதேசத்தவர்களும், 9 மியான்மர் குடிமக்களும், 3 இந்தோனீசியர்களும், நேப்பாளம், இந்தியாவைச் சேர்ந்த தலா ஒருவரும் பிடிபட்டதாகத் தெரிய வருகிறது.

20 முதல் 50 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரும் உரிய பயண ஆவணங்கள் இல்லாதவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்திருப்பதாக உள்துறை துணை அமைச்சர் இஸ்மாயில் மொஹம்மட் சாயிட் தெரிவித்துள்ளார்.

சில அந்நியத் தொழிலாளர்கள் வைத்திருந்த ஐ.நா. அகதிகள் அட்டையும் சந்தேக்ததுக்குரியவை என்று அவர் கூறியுள்ளார்.

"தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் வைத்திருக்கும் அட்டைகள் உண்மையானவையா என்பதை அறிய விசாரணை நடத்தப்படும். வேலை அனுமதி உள்ளதா எனவும் கண்டறியப்படும்," என்று துணை அமைச்சர் இஸ்மாயில் மொஹம்மட் சாயிட் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset