செய்திகள் உலகம்
72 வயதுள்ளவருக்கு 43 முறை கொரோனா தாக்கியது; சவப்பெட்டியும் தயாரித்து வைத்திருந்தவர் மீண்டு வந்த அதிசயம்
பிரிஸ்டல்:
பிரிட்டனில் உள்ள 72 வயது மூத்த குடிமகன் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் இவரது உடலில் அதிக நாட்கள் கொரோனா வைரஸ் தங்கியிருந்ததுதான்.
டேவ் ஸ்மித் என்கிற வாகன பயிற்சியாளரான இவர், இதுகுறித்து கூறினார். கடந்த 10 மாதங்களில் 43 முறை இவரது உடலில் கொரோனா பாசிட்டிவ் அறிகுறி தென்பட்டதாகவும் ஏழு முறை இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தான் இறக்கப் போகிறோம் என்ற நினைப்பில் ஸ்மித் தனக்கு சவப்பெட்டியை தயார் செய்துவிட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இவர் இறக்கவில்லை. பத்து மாதங்களாக இவரது உடலில் கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் தாக்கி வெளியேறியுள்ளது. இதன்மூலமாக உலகிலேயே அதிகமுறை வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட்ட நபர் என்கிற பெயரை டேவ் ஸ்மித் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனை அடுத்து வரும் ஜூலை மாதம் பிரிட்டனில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முழுவதுமாக நீக்க போரிஸ் ஜான்சன் அரசு முடிவெடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
