செய்திகள் மலேசியா
4 தெற்காசிய நாடுகளில் இருந்து வந்தால் 3 வாரங்களுக்கு தனிமைப்படுத்தல் நீடிக்கும்: அரசு அறிவிப்பு
கோலாலம்பூர்:
மேலும் சில தெற்காசிய நாடுளிலிருந்து மலேசிய வரக்கூடியவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில் இருந்து மலேசியா வருவரோக்கு இந்தவிதிமுறை பொருந்தும் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் அதிக அளவில் பதிவாகி வந்த நிலையில், அங்கிருந்து வரக்கூடிய பயணிகளை 21 நாட்கள் தனிமைப்படுத்துவது என மலேசிய அரசு முடிவு செய்து அறிவித்தது. பிற நாடுகளில இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவ்வப்போது நிலவும் தொற்று அபாய அளவைப் பொறுத்து வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான SOPகள் வகுக்கபடுவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
உருமாறிய கொரோனா வகைகளான டெல்டா, டெல்டா ப்ளஸ் உள்ளிட்ட புதிய தொற்றுக்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. எனவே, உலக நாடுகள் ஒவ்வொன்றும் புதிய விதிமுறைகளை அறிவித்து வருகின்றன.
இந் நிலையில் மேற்குறிப்பிட்ட 4 நாடுகளும் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் பட்டியலில் மலேசிய அரசாங்கத்தால் சேர்க்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
பண்டமாரானில் உள்ள உணவகத்தில் ஆயுதங்களுடன் ரகளை: 5 பேர் கைது
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
