செய்திகள் மலேசியா
போலிக் கடிதம்: ஹிஷாமுதீன் தரப்பு காவல்துறையில் புகார்
கோலாலம்பூர்:
புதிதாக அமையும் ஆட்சியை வழிநடத்த நடப்பு வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீனை தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ததாகக் கூறப்படும் கடிதம் பொய்யானது என்று தெரியவந்துள்ளது.
இந் நிலையில் இந்தக் கடிதம் தொடர்பாக அவரது பிரதிநிதிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
தாம் புதிதாக ஆட்சி அமைக்கத் தேவைப்படும் எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக ஹிஷாமுதீன் கூறியுள்ளதாகவும், இதுதொர்பாக மாமன்னரை சந்திக்க அவர் நேரம் கேட்டிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஹிஷாமுதீன் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்கள் என்று சில பெயர்களும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. இது போலிக் கடிதம் என ஹிஷாமுதீன் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் வெளியுறவு அமைச்சரின் ஊடகச் செயலாளர் ஹபீஸ் ஆரிபின் Hafiz Ariffin புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், குறிப்பிட்ட அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள கையெழுத்து, ஏற்பு முத்திரை, லெட்டர்பேட் ஆகிய அனைத்துமே போலியானவை என்றும் பொறுப்பற்ற சிலரால் அது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் உறுதி செய்யும்பொருட்டு இந்தப் புகார் அளிக்கப்படுவதாக Hafiz Ariffin தெரிவித்துள்ளார்.
எனவே, அதிகாரிகள் இதுகுறித்து விசாரமணை நடத்தி இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 10:08 pm
கனமழையை தொடர்ந்து தலைநகரில் திடீர் வெள்ளம்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
