நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மியாமியில் 12 அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்தது: அமெரிக்க தீயணைப்புத் துறை தகவல்

மியாமி: 

சற்று நேரத்திற்கு முன்பு அமெரிக்காவின் மியாமி கடற்கரைக்கு அருகுல் அமைந்த 12-மாடி காண்டோமெனியம் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று ஊர்ஜிதமான தகவல் வெளியாகவில்லை.

மியாமி கடற்கரைக்கு வடக்கே சில மைல் தொலைவில் உள்ள சர்ப்சைடில் 80 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் மீட்புக் குழுக்கள் களத்தில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மியாமி-தீ அணைப்புத் துறையின் தலைவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளின் சிக்கி இருப்பவர்களை கப்பாற்றி வெளியில் கொண்டுவருவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தப்பிப்பிழைத்தவர்களை வெளியேற்றி, இடிபாடுகளில் இருந்து கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சர்ப்ஸைட் மேயர் சார்லஸ் புர்கெட் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்,  குறைந்தது ஒரு நபர் இறந்துவிட்டார் என்பதை  நான் உறுதிப்படுத்துகிறேன் என்றார்.

"இது கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துள்ளது. அமெரிக்காவில் கட்டிடங்கள் கீழே விழுவதை நாம் இதுவரை காணத ஒன்று."

அந்தப் பகுதி முழுவதும் இடிபாடுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடந்தன. 88ஆவது தெரு மற்றும் காலின்ஸ் அவென்யூ அருகே அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதற்கு என்ன காரணம் என்று தீயணைப்புத் துறை இன்னும் சொல்லவில்லை.

அருகிலுள்ள சாலைகளை போலீசார் மூடி வைத்துள்ளனர். மேலும், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மற்றும் போலீஸ்கார்கள் இப்பகுதியில் குவிந்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset