நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ எம்பிக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனரா?: சாஹித் ஹமீதி

கோலாலம்பூர்:

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று கூறப்படுவதை அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் சாஹிட் ஹமீதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அத்தகைய கூற்றுகள் வெறும் கற்பனைக் கதைகள்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ நஸ்‌ரி அஸீஸ், நடப்பு வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் துன் ஹுசைனுக்கு ஆதரவாக 24 அம்னோ எம்பிக்கள் சத்திய பிரமாணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக நேற்று கூறியிருந்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் ஆவதை தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும், நடப்பு பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசினை அப் பதவியில் இருந்து விலக்குவது தங்கள் எண்ணம் அல்ல என்றும் நஸ்‌ரி அஸீஸ் விளக்கம் அளித்திருந்தார்.

அம்னோ உறுப்பினர்கள் தங்கள் தேசியத் தலைவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றும் நஸ்‌ரி அஸீஸ் தெரிவித்தது குறித்து, சாஹிட் ஹமீதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "என்ன... எம்பிக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனரா?... இது கட்டுக்கதை," என்றார் சாஹிட் ஹமிதி.

அம்னோ தேசியத் தலைவர் பதவியில் இருந்து சாஹிட் ஹமிதி விலக வேண்டும் என தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறார் நஸ்‌ரி.

இந் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மாமன்னருடனான சந்திப்பின்போது அன்வார் பிரதமராக அம்னோ ஆதரவு அளிக்கும் என சாஹித் ஹமீதி கூறியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset