
செய்திகள் விளையாட்டு
யூரோ கோப்பை: செக் குடியரசு, ஸ்காட்லாந்து வெளியேறின; இங்கிலாந்து, குரோஷியா முன்னேற்றம்
லண்டன்:
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் டி பிரிவில் இங்கிலாந்து, குரோஷியா அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. செக் குடியரசு, ஸ்காட்லாந்து அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின.
டி பிரிவு அணிகளுக்கான கடைசி லீக் போட்டி நேற்று நடந்தது. லண்டனில் நடந்த ஆட்டத்தில் செக் குடியரசு - இங்கிலாந்து அணிகள் விளையாடின. டிரா செய்தாலே அடுத்த சுற்று வாய்ப்பு என்ற நிலையில் 2 அணிகளும் களம் கண்டன. அதனால், கோல் அடித்து முன்னிலை பெறவும், அதே நேரத்தில் கோல் விழாமல் தடுப்பதிலும் கவனமாக இருந்தன.
ஆனாலும் ஆட்டம் தொடங்கிய 12ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் அற்புதமாக கோல் போட்டு தங்கள் அணிக்கு முன்னிலை கொடுத்தார். அதன் பிறகு ஆட்டம் நடந்த 78 நிமிடங்களில் எந்த அதிசயமும் நடைபெறவில்லை. முடிவில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது.
மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் குரோஷியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. வெற்றி மட்டுமே, அதுவும் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு என்ற நிலையில் இந்த அணிகள் மோதின. முதல் பாதியின் 17வது நிமிடத்தில் குரோஷிய வீரர் நிகோலா வ்லாசிச், ஸ்காட்லாந்து வீரர் காலம் மெக்ரெகர் 42வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதனால் இரு அணிகளும் இடைவேளையின்போது 1-1 என சமநிலை வகித்தன.
அதன் பிறகு 2ஆவது பாதியின் 62ஆவது நிமிடத்தில் குரோஷியாவின் லூகா மோட்ரிச், 77ஆவது நிமிடத்தில் இவான் பெரிசிச் ஆகியோர் கோல் அடிக்க, அந்த அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று டி பிரிவில் இருந்து 2ஆவது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
டி பிரிவில் கடைசி 2 இடங்களை பிடித்த செக் குடியரசு, ஸ்காட்லாந்து அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:18 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
September 18, 2025, 10:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
September 17, 2025, 10:57 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி
September 17, 2025, 10:56 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am