நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுக்குமாடிக் குடியிருப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்: ஏழு பேர் கைது

ஷா ஆலம்:

அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று ஷா ஆலம் பகுதியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக SOPக்களை மீறி சிலர் ஒன்று கூடியிருப்பது குறித்து பொதுமக்களில் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து போலிசார் நடவடிக்கை மேற்கொண்டதாக ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைமை ஏசிபி பஹாருதீன் மாட் தய்யுப் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

கைதான ஏழு பேரும் 21 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து 4.42 கிலோ எடை கொண்ட syabu-வும், 0.72 கிராம் யாபா (yaba) மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஐந்து தனி நபர்கள் போதை மருந்து உட்கொண்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

கைதான ஏழு பேருக்கும் தலா 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது என்றும், ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்றது மற்றும் சமூக இடைவெளி பேணுவதைக் கடினமாக்கியது ஆகிய SOPக்களை மீறிய குற்றச்சாட்டுகளை அவர்கள் மீறியுள்ளனர் என்றும் ஏசிபி பஹாருதின் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்கள் நான்கு நாட்கள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுவார்கள் என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset