
செய்திகள் மலேசியா
59 ஆயிரம் சிறு வணிகர்களுக்கு வாடகை நிவாரணம் அளித்திடுக: சார்லஸ் சந்தியாகு வலியுறுத்து
கோலாலம்பூர்:
சிறு வணிகர்களுக்கு வாடகைத் தொகை நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு வலியுறுத்தி உள்ளார்.
இதன் மூலம் 59 ஆயிரம் சிறு வணிகர்கள் பலனடைவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
"கடந்த ஆண்டு முதன்முதலாக முழு முடக்க நிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து நாட்டில் சுமார் 6,500 உணவகங்களும், 1,011 கட்டடங்களும் மூடப்பட்டுவிட்டன. அரசாங்கம் அளித்த கடன் தவணைச் சலுகை உள்ளிட்ட நிதி உதவிகள் குறிப்பிட்ட சில பிரிவினரைச் சென்றடையவில்லை.
"அரசுக்கு சொந்தமான தொழில் வளாகங்களில் இயங்கி வரும் சிறு வணிகர்களுக்கு மட்டும் அரசாங்கம் கடன் தவணை சலுகையும், வாடகை நிவாரணமும் தருவதுடன் அரசு நின்றுவிடக் கூடாது. மற்ற வணிகர்களும் முழுமுடக்க நிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
"எனவே, வாடகை நிவாரணம் தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் தொழில் சமூகத்துக்கு இடையே ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும். இதில் எந்தவித காலதாமதமும் இருக்கக் கூடாது.
மருந்தகங்கள், சிகையலங்காரம், உணவகம் ஆகியவை அந்தந்த வட்டார சமூகங்களைச் சார்ந்துள்ளன," என்று சார்லஸ் சந்தியாகு மேலும் வலியுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm