நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா மடானி சின்னத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் அறிமுகப்படுத்தினார் 

கோலாலம்பூர்: 

அனைத்துலக ரீதியில் மலேசியாவின் புகழும் மாண்பும் மோலேங்க செய்யப்பட வேண்டும் என்ற கருத்தினை முன்னிருத்தி மலேசியா மடானி கொள்கையானது அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதன் சின்னத்தைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகப்படுத்தினார். 

ஜாலூர் கெமிலாங் கொடியில் உள்ள நான்கு நிறங்களும் இந்த சின்னத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் அந்த சின்னத்தில் இருக்கும் விரல்கள் நாட்டின் தேசிய ரூக்கும் நெகாராவை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. 

இந்த சின்னத்தை டத்தோஶ்ரீ அன்வார் அவரின் டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் அறிமுகம் செய்தார். பல்வேறு நிலைகளில் மலேசியா மடானி மக்கள் மத்தியில் நிலைப்பெற வேண்டும் என டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். 

-மவித்திரன் கிருஷ்ணன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset