நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெ. 1,500 அடிப்படை சம்பளம் எங்கே? ஒப்பந்த  தொழிலாளர்கள்  கேள்வி

புத்ராஜெயா:

எங்களுக்கான 1,500 வெள்ளி அடிப்படை சம்பளம் எங்கே என்று ஒப்பந்த தொழிலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அரசாங்கத்தில் ஒப்பந்த  தொழில்களை மேற்கொண்டு வரும் தொழிலாளர்கள் இன்று புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் இலாகாவின் முன்புறம் கூடினர்.

அரசாங்க மருத்துமனைகள், பள்ளிகளில் பாதுகாவலர், சுத்தம் செய்யும் தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் ஒன்று கூடி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மலேசியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 1,500 வெள்ளி அடிப்படை சம்பளத்தை அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்தது.

இருந்த போதிலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இந்த புதிய சம்பள முறை அமலுக்கு கொண்டு வரப்படவில்லை.

அவர்களுக்கு இன்னமும் 1,200 வெள்ளி தான் சம்பளமாக வழங்கப்படுகிறது என்று நெகிரி செம்பிலான் ஒருங்கிணைப்பாளர் எஸ். தினகரன் கூறினார்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படை சம்பளமாக 1,500 வெள்ளி வழங்கப்பட வேண்டும்.

இதற்காக ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற முத்திரையை அரசாங்கம் நீக்க வேண்டும்.

இதனை வழியுறுத்தி தான் பிஎஸ்எம் கட்சியும் அரசாங்க ஒப்பந்த தொழிலாளர்களும் பிரதமர் இலாகாவில் மகஜர் வழங்கியதாக அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset